முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி குண்டு வெடிப்பு: பாதிக்கப்பட்டவர்களிடம் நேரில் நலம் விசாரித்தார் முதல்வர் ரேகா

செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2025      இந்தியா
Reka-Guptha 2025-11-11

Source: provided

புதுடெல்லி : டெல்லி குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு அனைத்து வகையான உதவிகளையும் வழங்கும் என்று காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் நலம் விசாரித்த பிறகு டெல்லி முதல்வர் ரேகா குப்தா உறுதியளித்துள்ளார்.

டெல்லியில் நேற்று முன்தினம் மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் ரேகா குப்தா, “இது ஒரு துரதிருஷ்டவமான சம்பவம். இது தொடர்பாக அனைத்து விசாரணை அமைப்புகளும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. காயமடைந்தவர்களை நாங்கள் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தோம். அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளையும் அரசு வழங்கி வருகிறது. அவர்கள் எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ள மாட்டார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு மிகவும் வேதனையானது, கவலை அளிக்கக்கூடியது. இந்த துயர விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. டெல்லி காவல்துறை, என்எஸ்ஜி, என்ஐஏ, எஃப்எஸ்எல் ஆகிய பாதுகாப்புப் படைகள் இணைந்து முழு சம்பவத்தையும் விசாரித்து வருகின்றன..  டெல்லி ஜே.பி. மருத்துவனைக்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்து, அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினேன். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் எந்த பற்றாக்குறையும் இல்லை. தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் உடனடியாகவும் அவசரமாகவும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.” என தெரிவித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து