Idhayam Matrimony

ஜப்பானில் பொருளாதார நெருக்கடி: பிரதமர், அமைச்சர்களின் சம்பளத்தை குறைக்க முடிவு

செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2025      உலகம்
Japan 2025-10-19

Source: provided

டோக்கியோ : ஜப்பானில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிரதமர் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஜப்பானில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி (வயது 64) தேர்வு செய்யப்பட்டார். பழமைவாதியான இவர் எம்.பி.யாக இருந்த காலகட்டத்திலேயே சிக்கன நடவடிக்கையை வலியுறுத்தி வந்தார்.

இந்தநிலையில் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு முயற்சி எடுத்து வருகிறார். இதன் முதல்கட்டமாக பிரதமர் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை குறைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளார். இதற்காக பொது ஊழியர் ஊதிய சட்டத்தை திருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான விவாதம் ஜப்பான் நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

ஜப்பானை பொறுத்தவரை எம்.பி.க்களுக்கு ஒரு மாத சம்பளமாக அந்த நாட்டு ரூபாயில் 12.94 லட்சம் யென் (ரூ.7 லட்சத்து 42 ஆயிரம்) வழங்கப்படுகிறது. இந்த தொகையில் இருந்து பிரதமருக்கு 11.52 லட்சம் யென் (ரூ.6 லட்சத்து 60 ஆயிரத்து 429) மற்றும் மந்திரிகளுக்கு 4.89 லட்சம் யென் (ரூ.2 லட்சத்து 81 ஆயிரத்து 497) கூடுதலாக வழங்கப்படுகிறது. ஆனால் செலவு குறைப்பு நடவடிக்கையின்படி கூடுதலாக வழங்கப்படும் தொகையில் இருந்து பிரதமர் 30 சதவீதமும், மந்திரிகள் 20 சதவீதமும் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளனர்.

இதன்மூலம் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் முறையே ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 589 மற்றும் ரூ.63 ஆயிரத்து 345 ஆக குறைக்கப்படும் என தலைமை அமைச்சரவை செயலாளர் மினோரு கிஹாரா தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகளும் வரவேற்பு தெரிவித்து உள்ளன. அதேசமயம் ஆளுங்கட்சியிலேயே இதற்கு சில எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து