Idhayam Matrimony

டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: குற்றவாளியுடன் தொடர்புடைய காரை தேடும் டெல்லி போலீஸ்

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      இந்தியா
Delhi-Car 2025-11-11

Source: provided

டெல்லி : டெல்லி கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில், குற்றவாளியுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சிவப்பு நிற ஸ்போர்ட்ஸ் காரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

டெல்லி செங்கோட்டை அருகே, ஐ20 காரில் குண்டு வைத்து வெடிக்க வைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள், ஏற்கனவே சிவப்பு நிற ஸ்போர்ட்ஸ் வகை கார் ஒன்றை வைத்திருந்ததாக புலனாய்வு விசாரணையில் தெரிய வந்திருப்பதைத் தொடர்ந்து, அந்தக் காரை டெல்லி காவல்துறை தேடி வருகிறது. இந்த வாகனத்தைத் தேடும் பணியில், டெல்லி காவல்துறையைச் சேர்ந்த ஐந்து குழுக்கள் ஈடுபட்டுள்ளன. மேலும், கார் பற்றிய தகவல்களைக் கொடுத்து, தேடுதல் பணியில் உத்தரப்பிரதேச மற்றும் ஹரியாணா காவல்துறையும் ஈடுபட்டுள்ளனர்.

ஐ20 காரில் வெடிபொருள்கள் வெடித்ததில், நவ. 10ஆம் தேதி 12 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில், குற்றவாளிகள் மேலும் இரண்டு பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கியிருப்பது தெரிய வந்தது. டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சிவப்பு நிற கார் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து