Idhayam Matrimony

ராஜபாளையத்தில் கோவிலில் நடந்த இரட்டை கொலை குற்றவாளி காவலரை வெட்டி தப்பி ஓட முயன்றதால் சுட்டுப்பிடிப்பு

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      தமிழகம்
Gun 2023-10-05

Source: provided

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் கோவிலில் நடந்த இரட்டை கொலை குற்றவாளி காவலரை வெட்டி தப்பி ஓட முயன்ற நிலையில் அவனை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தப்பி ஓடிய பிரதான குற்றவாளி முனியாண்டியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்கு பகுதியில் உள்ள அருள்மிகு தவம் பெற்ற நாயகி உடனுறை அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில்  நள்ளிரவு காவலர்கள் சங்கர பாண்டியன் மற்றும் பேச்சிமுத்து ஆகிய இருவரையும் அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு உண்டியலை உடைத்து கொள்ளையடித்து சென்ற இருவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். 

இந்நிலையில் தேவதானம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் வயது 25 என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். கொலை செய்து உண்டியலை கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவருடன் சேர்ந்து முனியாண்டி வயது 30 என்பவரும் இணைந்து இந்த செயலை செய்தது கண்டறியப்பட்டது. 

இந்நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் சேத்தூர் அருகே உள்ள அசையாமணி விலக்கிலிருந்து மேற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் கல்லணை அஞ்சநேயர் கோவில் அருகே கொள்ளையடித்த பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக நாகராஜ் கூறியதன்படி, சேத்தூர் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா, சார்பு ஆய்வாளர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் அவரை ஜீப்பில் ஏற்றி கல்லணை பகுதிக்கு சென்றனர். 

அங்கு சென்றவுடன் புதைத்து வைத்திருந்த இடத்தின் அருகே அரிவாளை எடுத்து சார்பு ஆய்வாளர் கோட்டைச்சாமியை தோள் பட்டையில் வெட்டி தப்பி ஓட முயற்சிக்கும்போது நாகராஜை வலது முழங்கால் கீழே சேத்தூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். 

படுகாயம் அடைந்த சார்பு ஆய்வாளர் கோட்டைச்சாமி, மற்றும் துப்பாக்கி குண்டு காயம் பட்ட நாகராஜ் ஆகிய இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். தப்பி ஓடிய பிரதான குற்றவாளி முனியாண்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து