முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரிய முன்னாள் பிரதமர் கைது

வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2025      உலகம்
Yun-Suk-Yol

Source: provided

சியோல்: தென்கொரிய முன்னாள் பிரதமரை போலீசார் கைது செய்தனர்.

தென்கொரிய அதிபராக செயல்பட்டவர் யூன் சுக் இயோல். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாட்டில் அவசர நிலையை பிரகடனபடுத்தினார். ஊழல் குற்றச்சாட்டில் விசாரணையை எதிர்கொண்டு வந்த யூன் சுக் இயோல் அதில் இருந்து தப்பிக்க அவசர நிலையை பிரகடனப்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. பின்னர், அவசர நிலை பிரகடனம் திரும்பப்பெறப்பட்டது.

இதனை தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோல் நீக்கப்பட்டார். புதிய அரசு பதவியேற்றுள்ளது. அதேவேளை, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது தொடர்பாக யூன் சுக் இயோலை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தென்கொரிய முன்னாள் பிரதமர் வாங்க் ஹொ யன் மற்றும் முன்னாள் உளவுத்துறை தலைவர் ஷொ டெய் யங் ஆகிய இருவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது அதற்கு ஆதரவாக செயல்பட்டதாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து