முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா முதல் டெஸ்ட்: பும்ரா வேகத்தில் வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா அணி

வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2025      விளையாட்டு
14-Ram-90

Source: provided

கொல்கத்தா: கொல்கத்தா முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா வேகத்தில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு சுருண்டது. முதல் நாள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்களை எடுத்துள்ளது.

பேட்டிங் தேர்வு... 

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரியான் ரிக்கல்டன் - எய்டன் மார்க்ரம் களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

பும்ரா அபாரம்...

இதில் மார்க்ரம் தனது முதல் ரன்னை எடுக்க 23 பந்துகள் எடுத்து கொண்டார். முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ரிக்கல்டன் 23 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் போல்டானார். அடுத்து முல்டர் களமிறங்கினார். சிறிது நேரத்திலேயே மார்க்ரமையும் (31 ரன்கள்) பும்ரா காலி செய்தார். அடுத்து வந்த பவுமா (3 ரன்), குல்தீப் சுழலில் சிக்கினார். பின்னர் டோனி டி சோர்ஜி களமிறங்கினார். அவர் 24 ரன்களில் வெளியேறினார்.

159 ரன்களுக்கு... 

தொடர்ந்து வந்த கைல் வராயன் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் . மார்கோ ஜான்சன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார் .மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 55 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளும், சிராஜ் , குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் இந்திய அணி விளையாடியது. 

ஜெய்ஸ்வால் அவுட்...

தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் , ஜெய்ஸ்வால் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர் இருவரும் இணைந்து நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். இறுதியில் 20 ஓவர்களில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் 13 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். 

வெல்லப்போகும் ஒரே டாஸ்...

முன்னதாக இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியையும் சேர்த்து இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ள சுப்மன் கில் ஒரே ஒரு முறை மட்டுமே டாஸில் வெற்றி பெற்றுள்ளார்.  இந்நிலையில் இந்த போட்டியில் டாஸை இழந்த பின் சுப்மன் கில் அளித்த பேட்டியில், “நான் வெல்லப் போகும் ஒரே டாஸ் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்தான் என்று நம்புகிறேன்” என சிரித்துக்கொண்டே கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து