எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுச்சேரி : திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உலக பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். சனிக்கிழமைகளில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம்.
பக்தர்கள் எளிதாக சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கோவிலில் நடைபெறும் பூஜைகள் மற்றும் இதர விவரங்கள் குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ‘கோவில் வழிகாட்டிகள்’ என்ற பெயரில் பக்தர்களை சிலர் கோவில் உள்ளே அழைத்துச் சென்று பூஜை, பரிகாரம் உள்ளிட்டவற்றை செய்து தருவதாக கூறி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல்துறையினர் நேற்று கோவில் வளாகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது வழிகாட்டிகள் என்று கூறிக்கொண்டு பக்தர்களிடம் பணம் பெற்ற கோவில் ஊழியர்கள் உள்ளிட்ட 15 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில், கோவில் ஊழியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கட்டண தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்திற்கான வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் எள் தீபம் வழங்குவதற்கு ஆட்கள் இல்லாததால், பக்தர்கள் தீபம் ஏற்றமுடியாமல் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து கோவில் ஊழியர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


