முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாத அச்சுறுத்தல்: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: கார்கே வலியுறுத்தல்

சனிக்கிழமை, 15 நவம்பர் 2025      இந்தியா
Mallikarjuna-Karke 2023 02

டெல்லி, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கார்கே வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் வளர்ந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் நௌகாம் காவல் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 உயிர்கள் பலியாகியுள்ளன, 24 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு மருத்துவர்களின் உதவியுடன் உடனடி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.

தில்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு பயங்கரவாதத் தாக்குதலுக்கு சில நாள்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகளை வலுப்படுத்த மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும். இதற்கு பொறுப்பேற்பதில் இருந்து தப்பிக்க முடியாது.

பயங்கரவாத செயல்களுக்கு எதிராக காங்கிரஸ் இந்த நாட்டுடன் துணை நிற்கிறது. சமீபத்திய தில்லி தாக்குதலின் எதிரொலியாக, வெளிப்புற ஆதரவுடன் வளர்ந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து