Idhayam Matrimony

பீகார் தேர்தல் வெற்றிக்கு யார் காரணம்? ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதில்

சனிக்கிழமை, 15 நவம்பர் 2025      இந்தியா
Chandrababu-Naidu 2024-06-2

டெல்லி, பீகாரில் ஆளும் கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பது குறித்து ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.

பீகார் தேர்தலில், கருத்துக் கணிப்புகளின் முடிவுகளையும் விஞ்சி ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி அடைந்திட முக்கிய காரணம் ஒருவரே என்று அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரும் ஆந்திர பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார். அவர் குறிப்பிடுவது வேறு யாரையும் அல்ல, பிரதமர் நரேந்திர மோடியைத்தான்!

பீகார் தேர்தலில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில், பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து சந்திரபாபு நாயுடு பேசியிருப்பதாவது: “இந்த தேர்தல் ஒரு செய்தியை நமக்குத் தருகிறது.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர், உலகின் 11-ஆவது பெரிய பொருளாதாரமாக விளங்கிய நம் நாடு, உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாகும் இலக்கை நோக்கி அந்த வழியில் நகர்ந்து வருகிறது. இவையனைத்தும் அரசின் நிலையான கொள்கைகள் தொடர்வதால் நடைபெறுகின்றன. இந்த இடத்தில்தான் இந்தியாவும் இந்தியர்களும் அவரது செயல்திறனை அங்கீகரிக்கிறார்கள். மக்கள் சிறந்த எதிர்காலத்தை, மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தையே விரும்புகிறார்கள். இதையே பிரதமர் இப்போது நாட்டு மக்களுக்கு வழங்கி வருகிறார்” என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து