Idhayam Matrimony

இந்தியாவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் : அமெரிக்க அதிகாரி தகவல்

சனிக்கிழமை, 15 நவம்பர் 2025      உலகம்
INDIA-USA 2025-08-26

Source: provided

வாஷிங்டன் : இந்தியாவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம்; அமெரிக்க அதிகாரி தகவல் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கடும் வரி விதித்தார்.ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்கி வருவதால் மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு இந்தியா பணியவில்லை.

தொடர்ந்து இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கி வருகிறது. இதனால் இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது.இந்த நிலையில் இந்தியாவுடனான நட்பை தொடர்ந்து நீடிப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி தனது சிறந்த நண்பர் என டிரம்ப் சொல்லி வருகிறார். மேலும் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரம்பின் நெருங்கிய நண்பரான செர்ஜியோ கோர் இந்தியாவின் புதிய தூதரக பொறுப் பேற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்ற விழாவில் பேசிய டிரம்ப் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் என சூசகமாக தெரிவித்தார். அவரின் இந்த கருத்து இந்தியாவுடனான வர்த்தக முன்னேற்றத்திற்கான ஒரு படிக்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இது தொடர்பாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறும் போது, இந்தியாவுடன் எங்களுக்கு 2 விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நிச்சயமாக எங்களுக்குள் ஒருபரஸ் பரபேச்சுவார்த்தை நடந்து முடிந்து இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என தெரிவித்து உள்ளதாக வெளியாகி தகவல் இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து