Idhayam Matrimony

மர்ம பலூன்களை பறக்கவிட்ட விவகாரம்: பெலாரஸ் எல்லையை மூடிய லித்துவேனியா

சனிக்கிழமை, 15 நவம்பர் 2025      உலகம்
Lithuania-border-2025-11-15

வில்னியஸ், தங்கள் எல்லைக்குள் மர்ம பலூன்களை பறக்கவிட்ட விவகாரத்தை அடுத்து பெலாரஸ் எல்லையை மூடியது லித்துவேனியா.

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு லித்துவேனியா. நேட்டோ அமைப்பின் உறுப்பினரான இந்நாடு பெலாரஸ் அருகே உள்ளது. உக்ரைன் - ரஷ்யா போரில் லித்துவேனியா உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை ரஷ்யாவுக்கு பெலாரஸ் ஆதரவு அளித்து வருகிறது.

இதனிடையே, பெலாரசில் இருந்து தங்கள் நாட்டு எல்லைக்குள் மர்ம பலூன்கள் பறக்கவிடப்படுவதாக லித்துவேனியா குற்றஞ்சாட்டி வருகிறது. குறிப்பாக, விமான நிலையங்களை குறிவைத்து இந்த பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக லுத்துவேனியாவின் தலைநகர் வில்னியஸ் உள்பட முக்கிய நகரங்களில் விமான நிலையங்கள் மூடப்பட்டு விமான சேவை பாதிக்கப்பட்டது. இந்த ஹீலியம் பலூன்கள் மூலம் பெலாரசில் இருந்து போதைப்பொருட்கள், சிகிரெட்டுகள் உள்பட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதாக லித்துவேனியா குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், பெலாரஸ் உடனான எல்லையை லித்துவேனியா மூடியுள்ளது. மர்ம பலூன்கள் பறக்கவிடப்படுவதை பெலாரஸ் தடுத்து நிறுத்தவில்லையென்றால் இருநாட்டிற்கும் இடையேயான வர்த்தம் உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் லித்துவேனியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து