முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்: பெண் டாக்டர் உட்பட மேலும் 3 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2025      இந்தியா
Jail 2024 08 09

Source: provided

புதுடெல்லி : டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் டாக்டர் ஒருவர் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, காஷ்மீரைச் சேர்ந்த 200 மருத்துவ மாணவர்கள் போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

டெல்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக காஷ்மீர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த அதீல் மற்றும் முசம்மில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றிய மற்றொரு டாக்டரான உமரும் காஷ்மீரில் பணியாற்றி வந்துள்ளான்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் பல டாக்டர்களுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதனிடையே, டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பெண் டாக்டர் ஷாயின் சையத் மற்றும் மேலும் இரண்டு டாக்டர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றி வந்தது தெரிய வந்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய தெற்கு காஷ்மீரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் பிரியங்கா ஷர்மாவை பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, கைது செய்யப்பட்ட டாக்டர் அதீல் அளித்த தகவலின் பேரில் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த பிரியங்கா ஷர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். 

அரியானாவைச் சேர்ந்த இவர், அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்துள்ளார். அவரது செல்போன் மற்றும் சிம் கார்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அதனை தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதேபோல, காஷ்மீரைச் சேர்ந்த 200 மருத்துவ மாணவர்கள் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். கான்பூர், லக்னோ, மீரட் மற்றும் ஷஹரன்பூர் உள்பட பிற நகரங்களில் காஷ்மீர் மாணவர்கள் பயிலும் கல்லூரிகள், பல்கலைகளையும் பயங்கரவாத தடுப்பு போலீசார் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து