எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொல்கத்தா : 2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் தெரிவித்தார்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு) தலைவர் நாராயணன் கூறியதாவது:- அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை திறனில் விரைவான கட்டத்துக்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் வணிக தொடர்பு செயற்கைக்கோள் மற்றும் பல பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி பயணங்கள் உள்பட 7 ஏவுதல்களை இலக்காக இஸ்ரோ கொண்டுள்ளது. சந்திரயான்-4, 2028-ம் ஆண்டை இலக்காக கொண்டுள்ளது. சந்திரயான்-4 திட்டத்தை அரசு அங்கீகரித்துள்ளது. இது சந்திரனுக்கு சென்று திரும்பும் போது மண், பாறை மாதிரி எடுத்து வரும் பணிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்கா, ரஷியா, சீனாவால் மட்டுமே இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து கூட்டு சந்திர துருவ ஆய்வு திட்டமான லுபெக்ஸ் திட்டத்தை இஸ்ரோ தொடங்கும். இந்த திட்டம் சந்திர தென் துருவத்தில் உள்ள நீர் மற்றும் பனி பிரதேசத்தை ஆய்வு செய்வதை நோக்கமாக கொண்டது. விரிவடைந்து வரும் தேவைக்கு ஏற்ப அடுத்த 5 ஆண்டுகளில் அதன் வருடாந்திர விண்கல தயாரிப்பை 3 மடங்காக அதிகரிக்க நோக்கமாக கொண்டு இஸ்ரோ செயல்பட்டு வருகிறது.
2035-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு வைக்கப்பட்ட இந்திய விண்வெளி நிலையத்திற்கான பணிகளை இஸ்ரோ தொடங்கி உள்ளது. இதன் 5 தொகுதிகளில் முதலாவது 2028-ம் ஆண்டுக்குள் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இந்த முயற்சி விண்வெளி நிலையத்தை இயக்கப்போகும் 3-வது பெரிய நாடாக இந்தியாவை மாற்றும். இந்தியாவின் ஆள் இல்லாத பயணங்களுக்கான இலக்கு 2025-ம் ஆண்டாக இருந்தது. அது தற்போது 2027-ம் ஆண்டுக்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
விண்வெளி துறை சீர்திருத்தங்களில் தனியார் பங்களிப்பு தற்போது அதிகரித்துள்ளது. உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு தற்போது சுமார் 2 சதவீதமாக உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் அதை 8 சதவீதமாக உயர்த்த இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் தற்போது ரூ.72 ஆயிரத்து 725 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2033-ம் ஆண்டுக்குள் இது 3 லட்சத்து 90 ஆயிரம் கோடியாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


