முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பையில் அதிகமுறை பங்கேற்பு: புதிய சாதனை படைக்கிறார்கள் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      விளையாட்டு
17-Ram-95

Source: provided

போர்ச்சு: மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ அடுத்தாண்டு உலகக் கோப்பையில் விளையாடி சாதனை நிகழ்த்தவிருக்கிறார்கள். 

அபார வெற்றி...

போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகக் கோப்பையில் ஆறாவது முறையாக விளையாட இருக்கிறார். அவரது அணி ஆர்மீனியாவுடன் 9-1 என அபார வெற்றி பெற்றது. 5 முறை பேலந்தோர் விருது பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ இதுவரை ஐந்து முறை உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது, 6-வது முறையாக விளையாட இருக்கிறார். 2006, 2010, 2014, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் விளையாடியுள்ளார். ஆனால், இன்னும் கோப்பை வெல்லவில்லை. அயர்லாந்து உடனான போட்டியில் ரெட் கார்டு பெற்றதால் நேற்றைய போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.

பங்கேற்பதில் சிக்கல்... 

இருப்பினும் அந்த அணி அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பையின் முதல் போட்டியிலும் ரொனால்டோ பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவரை அதிகமுறை ஃபிஃபா உலகக் கோப்பையில் விளையாடிய வீரர்கள் ஆண்டனியோ கார்பாஜல் - 5 (மெக்சிகோ) ஆண்ட்ரேஸ் கார்டாடோ - 5 (மெக்சிகோ)  லோதர் மாத்தூஸ் - 5 (ஜெர்மன்)  ரஃபேல் மார்க்வெஸ் - 5 (மெக்சிகோ)  லியோனல் மெஸ்ஸி - 5 (ஆர்ஜென்டீனா) கிறிஸ்டியானோ ரொனால்டோ - 5 (போர்ச்சுகல்) தற்போது, மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ அடுத்தாண்டு உலகக் கோப்பையில் விளையாடி சாதனை நிகழ்த்தவிருக்கிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து