முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் அருகே இளைஞர் சடலம் மீட்பு- பரபரப்பு

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2025      தமிழகம்
Dhinesh-Karthik 2025-11-18

Source: provided

சென்னை: கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் அருகே இளைஞரின் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்குக்கு சென்னை அக்கரை கடற்கரை பகுதியில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. இந்நிலையில் அவரது வீட்டின் பின்புறம் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முகத்திலும் வாயிலும் செலோடேப் சுற்றிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தகவலறிந்த நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே அவரது இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சடலம் அருகே கிடந்த பையை சோதனை செய்ததில் அவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கலையரசன் (வயது 33) என்பது தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து