முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2025      தமிழகம்
Train 2025-11-18

Source: provided

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.

திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மதுரை கோட்டத்தில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 20-ந்தேதி முதல் 25-ந்் தேதி வரை செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாக இந்த ரயில் செல்லாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் ரயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 20 மற்றும் 23-ந்தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி திருச்சி வழியாக இயக்கப்படும். கன்னியாகுமரி- ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 22-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (19-ம் தேதி) முதல் 24ம் தேதி வரை குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். கன்னியாகுமரி- ஐதராபாத் சிறப்பு ரயில் வருகிற 21-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து