Idhayam Matrimony

2-வது டெஸ்ட்டில் கில் விலகல்: இந்திய அணியில் படிகல், சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2025      விளையாட்டு
18-Ram-90

Source: provided

சென்னை: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் கில் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக இந்திய அணியில் படிக்கல், சாய் சுதர்சன் இவர்களில் ஒருவர் இடம்பெறக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஓய்வில் இருக்க... 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் கேப்டன் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். அவரால் உடனடியாக விமானத்தில் பயணம் செய்ய முடியாது. ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும். இதனால் கவுகாத்தியில் நடைபெறும் 2-வது டெஸ்டில் சுப்மன் கில் ஆடுவது சந்தேகமே. கொல்கத்தா டெஸ்டில் முதல் இன்னிங்சில் பாதியில் வெளியேறிய அவர் 2-வது இன்னிங்சில் ஆடவில்லை.

பேச்சுவார்த்தை... 

இந்நிலையில் அவருக்கான இடத்தில் யார் இடம் பெறுவார் என்பது மிக ஆவலை எதிர்நோக்கி உள்ளது. அதன்படி தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் அணியின் பயிற்சியின் போது படிக்கல், சாய் சுதர்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதனால் இவர்களில் யாருக்காவது ஒருவருக்கு வாய்ப்பு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து