முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத் அணி கேப்டன் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2025      விளையாட்டு
18-Ram-95

Source: provided

ஐதராபாத்: வரும் ஐ.பி.எல். சீசனிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ்தான் செயல்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 173 வீரர்கள்... 

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ம்  தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ம்  தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. இதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

3-வது முறையாக...

இதில் முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அடுத்த சீசனுக்கு முன்னதாக டிராவிஸ் ஹெட், பேட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, கிளாசென் போன்ற முன்னணி வீரர்களை தக்கவைத்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஐ.பி.எல். சீசனிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ்தான் செயல்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் அணியை கம்மின்ஸ் வழி நடத்துவது இது 3-வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 சீசன்களில்...

கடந்த 2 சீசன்களாக பேட் கம்மின்ஸ் தலைமையில் விளையாடிய முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18-வது சீசனில் (2025) 6-வது இடத்தை பிடித்து வெளியேறியது. அதற்கு முந்தைய சீசனில் (2024) 2-வது இடத்தை பிடித்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து