Idhayam Matrimony

ஆந்திராவில் 50 மாவோயிஸ்டுகள் கைது

புதன்கிழமை, 19 நவம்பர் 2025      இந்தியா
Nakselit

Source: provided

அமராவதி : ஆந்திராவில் பெண்கள் உள்பட 50 மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டோ, சரண் அடைந்தோ வருகின்றனர்.

இதனிடையே, ஆந்திர மாநிலம் அல்லுரி சீதா ராமராஜு மாவட்டம் மாரேடுமில்லி மண்டலம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி மாட்வி ஹிட்மாவும் அடக்கம். 

இந்நிலையில், மாவோயிஸ்டுகள் என்கவுன்டரை தொடர்ந்து ஆந்திராவில் 5 மாவட்டங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பெண்கள் உள்பட 50 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிபொருட்கள், ரூ. 13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து