Idhayam Matrimony

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. திட்டம்..?

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2025      தமிழகம்
Karur 2025-11-20

Source: provided

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணியில் அவர்கள் இரவு, பகலாக நடந்து வருகிறது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. குழுவினர் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள், மத்திய மின்துறை நிறுவனத்தின் அதிகாரிகள் என ஏராளமானோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி தகவல்களை பதிவு செய்து கொண்டனர். மேலும் நெரிசலில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே த.வெ.க. சார்பில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கரூர் கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கு திருச்சி கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே 2 பெண் சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை குழுவில் இணைந்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு வருகிற பிப்ரவரி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை திருச்சி கோர்ட்டில் தாக்கல் செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணியில் அவர்கள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து