Idhayam Matrimony

போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் தாக்குதல் - 28 பேர் பலி

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

டெல்லி: போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர்.

காசா மீது நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மத்யஸ்தத்தில் கடந்த 5 வாரங்களுக்கு முன் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதும் இஸ்ரேல் காசா மீது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காசா நகர் மற்றும் கான் யூனிஸ் பகுதிகளில் இஸ்ரேலிய விமானப்படை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்கள் நாட்டைத் தாக்கத் தயாராகி வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் அளவுக்கு வந்ததற்கு பின் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 280 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

டிரம்ப்பின் அமைதி திட்டம் மூலம் சர்வதேச படைகளை காசாவுக்கு அனுப்புவது குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இஸ்ரேல் காசாவை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து