எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கோவை: ஒரு ரூபாய் நாணயத்துடன் பிரதமர் மோடியின் கைக்கடிகாரம் வைரலாகிறது.
பிரதமர் நரேந்திர மோடி எப்போதுமே தான் அணியும் ஆடையின் மூலமாக சமூக வலைதளத்தில் டிரெண்டிங் ஆவார். குறிப்பாக சுதந்திர தினம், குடியரசு தினம் உள்பட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளின் போது அவர் அணியும் ஆடை அனைவரையும் கவரும். மேலும் அதன் பின்னணி குறித்த சுவாரசிய தகவல் வெளியாகும்.
அந்த வகையில் பிரதமர் மோடி தற்போது அணிந்துள்ள கைக்கடிகாரம் அனைவரையும் கவர்ந்துள்ளது. நம்நாடு சுதந்திரம் அடைந்ததை நினைவுகூறும் வகையில் அவரது கைக்கடிகாரம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியா 1947-ம் ஆண்டில் சுதந்திரம் அடைந்தது. அதனை போற்றும் வகையில் 1947-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தை கொண்டு அவரது கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது.
நாணயத்தின் நடுவே இந்தியாவின் சுதந்திர பயணத்தை குறிக்கும் மற்றும் நாட்டின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை பிரதிபலிக்கும் வகையிலான புலியின் உருவம் இடம்பெற்றுள்ளது. சுமார் ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விலை கொண்ட அந்த ரோமன் பாக் பிராண்ட் கைக்கடிகாரத்தை ஜெய்ப்பூரை சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இது, 43 மி.மீ. அளவுள்ள துருப்பிடிக்காத எக்கினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு ரூபாய் நாணயம் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் அச்சிடப்பட்ட கடைசி நாணயம் என்பதால் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த கைக்கடிகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


