முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கா்நாடக அரசியலில் திடீர் குழப்பம்: துணை முதல்வர் சிவகுமார் ஆதரவாளர்கள் சித்தராமையாவுக்கு எதிராக போர்க்கொடி

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2025      இந்தியா
TK-Sivakumar

Source: provided

பெங்களூரு : முதல்வர்  சித்தராமையா ஆட்சியில் அமர்ந்து 2.5 ஆண்டுகள் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், சித்தராமையாவுக்கு எதிராக ஆளும் காங்கிரசில் துணை முதல்வர் சிவகுமார் ஆதரவாளர்கள் திடீரென்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2023-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்வர்  பதவிக்கு சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் மேலிடம் முதல்வர் யை தேர்வு செய்வதில் கடும் நெருக்கடியை சந்தித்தது. அவர்கள் 2 பேருடனும் கட்சி மேலிட தலைவர்கள் 4 நாட்கள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இறுதியில் சித்தராமையா முதல்வர் யாக அறிவிக்கப்பட்டார். டி.கே.சிவக்குமார் துணை முதல்வர்  ஆக்கப்பட்டார். மேலும் முதல்வர்  பதவி ஆளுக்கு 2.5 ஆண்டுகள் என்று காங்கிரஸ் மேலிடம் ரகசிய ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல்வர்  சித்தராமையா ஆட்சியில் அமர்ந்து 2.5 ஆண்டுகள் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்துவிட்டது. இதனையடுத்து சித்தராமையாவுக்கு எதிராக ஆளும் காங்கிரசில் திடீரென்று போர்க்கொடி எழுந்துள்ளது. அதாவது துணை முதல்வர்  டி.கே.சிவக்குமாரின் ஆதரவு அமைச்சர்கள் 2 பேர், 9 எம்.எல்.ஏ.க்கள், ஒரு எம்.எல்.சி. என மொத்தம் 12 பேர் திடீரென்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர். 

டெல்லியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலை நேரில் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர்  வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்த உள்ளனர். ஆனால் சித்தராமையா, எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை கேட்டு முடிவு எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் விருப்பத்திற்கு மாறாக கட்சி மேலிடம் முடிவு எடுத்தால் வரும் நாட்களில் ஆட்சி சுமுகமாக நடைபெறுவது சிரமம் என்று காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. இதனால் டி.கே.சிவக்குமாருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு காங்கிரஸ் மேலிடம் தள்ளப்பட்டு உள்ளது. கர்நாடக அரசியலில் அடுத்து பல திருப்பங்கள் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து