எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜெனீவா : ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த அமைதி திட்டத்தில் திருத்தம் செய்ய ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. இந்த போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக வரி விதித்தார். ரஷ்ய அதிபர் புதினை அழைத்து பேசினார். ஆனால் போர் நிறுத்த முயற்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து, போரை நிறுத்தும் அடுத்தகட்ட முயற்சியாக ட்ரம்ப் 28 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்தார்.
ஆனால், ரஷ்யா நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரும் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதுபோல் இந்த அமைதி திட்டம் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்துள்ளார். அதே சமயத்தில், ரஷ்ய அதிபர் புதின் இதை ஏற்றுக்கொண்டுள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவின் அமைதி திட்டம் குறித்து உக்ரைனுக்கும், சில ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இடையே சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் பேச்சுவார்த்தை நடந்தது.
அதில், உக்ரைன் பிரதிநிதிகள் குழுவுக்கு அந்நாட்டு அதிபர் அலுவலக உயர் அதிகாரி ஆன்ட்றி யெர்மாக் தலைமை தாங்கினார். ஐரோப்பிய நாடுகள் தரப்பில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர். அமைதி திட்டம் ரஷ்யாவுக்கு சாதகமாக இருப்பதால், அதில் திருத்தம் செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


