Idhayam Matrimony

விமான போக்குவரத்துத்துறைக்கு தொடரும் சவால்கள்: டாடா குழுமம்

சனிக்கிழமை, 29 நவம்பர் 2025      இந்தியா
Air-India 2024-10-16

மும்பை, விமான போக்குவரத்துத் துறை தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்கிறது என்று டாடா குழுமம் தெரிவித்துள்ளது.

ஜே.ஆர்.டி.டாடாவின் 121-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாடா சன்ஸ் குழும தலைவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

விமான போக்குவரத்துத் துறை தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்கிறது. உலகளாவிய விநியோக சங்கிலி சிக்கல்களால் உதிரி பாகங்கள், உள்கட்ட மைப்பு மற்றும் புதிய விமானக் கப்பல்களின் இருப்பு மிகவும் கணிக்க முடியாததாக ஆகிவிடுகிறது. இந்த துறையில் இருக்கும் சவால்கள் காரணமாக, ஒவ்வொரு திட்டமும் கடினமாகி வருகிறது. விமான போக்குவரத்து என்பது அதிக மூலதனம் மிகுந்த வணிகமாகும். மேலும் இதில் லாப வரம்புகளும் மிகக் குறைவு. டாடா குழுமத்திற்கு ‘ஏர் இந்தியா’ என்பது வணிகம் மட்டுமல்ல என்று நான் உறுதியாக நம்புகிறேன். அது ஒரு பொறுப்பு.

இந்தியா 8 சதவீதம் வளர்ச்சி அடையும்போது, விமான போக்குவரத்துத் துறை 16 சதவீதம் வளர்ச்சி அடைகிறது. இந்த வளர்ச்சி குறைந்தபட்சம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொடரும். எனவே, இது பொருளாதார வளர்ச்சியில், குறிப்பாக விமான போக்குவரத்துத் துறைக்கு மிகவும் உற்சாகமான கட்டமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து