எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : டித்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் டித்வா புயல் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது:-
நாகையில் இரு பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருந்தது. மழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை. அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது. புயல் கரையை கடக்கும்வரை வெளியே வரவேண்டாம் என்ற முதல்வரின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும்.
28 பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. விமானப்படை மற்றும் கடலோர காவல் படைக்கும் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இன்று பாதிப்பை பொறுத்து தேவையான மாவட்டங்களுக்கு கூடுதல் கண்காணிப்பு அலுவலர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை போக்குவரத்து பாதிப்பு, உயிரிழப்பு இல்லை. 16 கால்நடைகள் மரணமடைந்துள்ளன, 24 குடிசைகள் சேதம் அடைந்துள்ளன. எந்தத் துறை அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்த்து, துறை சார்ந்த மூத்த அதிகாரிகளை அனுப்ப நடவடிக்கை. எல்லா மாவட்டத்திலும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான நிவாரண முகங்கள் தயார் நிலையில் உள்ளன.
டித்வா புயல் சென்னையை தாக்குமா.? என்பதை வானிலை மையம் தெளிவாகத் தெரியவில்லை. இருந்தபோதிலும் அதற்கான தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுத்துள்ளோம். திருமண மண்டபங்களை தற்காலிக முகாம்களை மாற்ற அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக 'டித்வா' புயலானது சென்னையை நோக்கி நெருங்கிவருவதால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் காணொலி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. நாகை மாவட்டம் தோப்புத்துறையில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்னையை ஒட்டி புயல் செல்லும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் கடற்கரையோரம் யாரும் செல்ல வேண்டாம். டித்வா புயலால் இதுவரை பெரிய பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ கிடையாது.
மீட்பு பணிகளுக்காக ஹெலிகாப்டர்களின் உதவியை நாடவும் அறிவுறுத்தி இருக்கிறோம். காற்றோடு மழை பெய்யும் போது பாதிப்புகள் இருக்கக்கூடும். படகு, பயிர்கள் சேதம் தொடர்பாக 30-ந்தேதிக்கு பிறகு கணக்கெடுத்து இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சரும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஒரு கோடியே 24 லட்சம் பேருக்கு புயல் முன்னெச்சரிக்கை குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.கடலூர், விழுப்புரத்திற்கு பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.புயல் எங்கு கரையை கடக்கும் என தற்போது வரை தெரியவில்லை என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


