எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ராகுல்காந்தி, சோனியா மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவினர் ராகுல், சோனியா மற்றும் 6 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.
2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'யங் இந்தியன்' நிறுவனத்தில் இயக்குநா்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் பொறுப்பேற்றனா். இதையடுத்து ஏ.ஜே.எல். நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் முடிவு செய்தது. அதைத் தொடா்ந்து அந்தக் கடன் தொகைக்காக ஏ.ஜே.எல்.நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடைபெற்றதா என்று கண்டறிய அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் சோனியாவுக்கும், ராகுலுக்கும் யங் இந்தியன் நிறுவனத்தில் 76 சதவீத பங்குகள் உள்ளன. அவா்களின் மேற்பாா்வையில் ஏ.ஜே.எல். நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் அந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கடன் அளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் சோனியா ராகுல் உள்ளிட்டோர் ரூ.988 கோடிக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது. குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவா்களான மோதிலால் வோரா, ஆஸ்காா் பொ்னாண்டஸ், யங் இந்தியன் நிறுவன நிா்வாகிகள் சுமன் துபே, சாம் பிட்ரோடா உள்ளிட்டோர், ஒரு தனியாா் நிறுவனம் மற்றும் யங் இந்தியன் நிறுவனம் மீதும் சதி மற்றும் பண முறைகேடு குற்றச்சாட்டை அமலாக்கத்துறை முன்வைத்தது.
இந்த குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடா்பாக டெல்லி கோர்ட்டில் தொடா் விசாரணையை மேற்கொண் டது. அமலாக்கத் துறையிடம் சில விளக்கங்களையும் கேட்டது. இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடா்பான உத்தரவை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ராகுல்காந்தி, சோனியா மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி கோர்ட்டில் இந்த வழக்கை ஒத்திவைத்த மறுநாள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவினர் ராகுல் காந்தி, சோனியா மற்றும் 6 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


