Idhayam Matrimony

இங்கிலாந்தில் இந்தியர் குத்திக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2025      உலகம்
Londan 2025-11-30

Source: provided

லண்டன் : இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்று வந்த அரியானவை சேர்ந்த இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். 

அரியானவை சேர்ந்த விஜய் குமார் ஷியோரன் (30) மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் பணிபுரிந்த நிலையில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றார். இந்த சூழலில், இந்த மாதம் 25 ஆம் தேதி வெர்ஸ்டரில் அடையாளம் தெரியாத நபர்களால் விஜய் கத்தியால் தாக்கப்பட்டார். விஜய் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஜய் உயிரிழந்தார். விஜய்யின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் அளித்த இங்கிலாந்து காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விஜய்யின் உடலை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வர உதவுமாறு குடும்ப உறுப்பினர்கள் வெளியுறவு அமைச்சகத்திடமும், அரியானா முதல்வர் நயாப் சிங் சைனியிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து