முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஞ்சான் (ரீ எடிட்) திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 1 டிசம்பர் 2025      சினிமா
Anjaan 2025-12-01

Source: provided

மும்பை தாதா சூர்யா, அவரது நண்பர் வித்யுத். இந்த இருவரது வளர்ச்சியை கண்டு பொறாமைப்படும் மும்பை நிழல் உலக தாதா மனோஜ் பாஜ்பயி, இந்த இருவரையும் பயமுறுத்தி கொலை மிரட்டல் விடுக்கிறார். பதிலுக்கு சூர்யாவும், மனோஜ் பாஜ்பயிக்கு மரண பயத்தை காட்ட, சூரியா துரோகத்தால் சுட்டு வீழ்த்தப்படுகிறார். பல வருடங்களுக்குப் பிறகு தனது அண்ணனைத் தேடி மும்பைக்கு வருகிறார் தம்பி சூர்யா. அண்ணன் பற்றி விசாரிக்கும் போது எதிரிகள் அவரை கொலை செய்திருப்பது தெரிய வருகிறது. அதே நேரம் அண்ணனைத் தேடிச்சென்றவர் தம்பி சூர்யா அல்ல, தாதா சூரியாதான் என்ற குழப்பத்தோடு நகர்த்துகிறார் இயக்குனர் லிங்கு. இதே பேட்டனில் 2014 ஆம் ஆண்டு வெளியாகி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட ‘அஞ்சான்’ படம் சிலரது திட்டமிடப்பட்ட சதியால் தோல்வியைத் தழுவியது என்று அதன் இநக்குனர் லிங்குசாமி கூறினார். ஆனால் எல்லா துரோகத்தையும் மீறி இப்படம் மீண்டும் இப்போது ரிலீசாகியுள்ளது. வாயில் குச்சியை வைத்துக் கொண்டு சூர்யா வலம் வருவது பெரிய வரவேற்பை பெற்றதோடு, அவரது ரசிகர்களை கொண்டாடவும் வைத்தது என்கிறார் இயக்குனர். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. சூர்யா மற்றும் சமந்தா  சம்மந்தப்பட்ட காட்சிகளைத் தவிர்த்து சூரியின் அனைத்து காட்சிகளும் எடிட் செய்யப்பட்டு 36 நிமிடங்கள் குறைக்கப்படுள்ளது. படத்தில் முந்தைய பிரதியில் இருந்த சிறு சிறு குறைகளை சரி செய்து, அஞ்சானுக்கு மீண்டும் புத்துயிர் அளித்துள்ளனர். மொத்தத்தில், ‘அஞ்சான்’ ஓகே ரகமே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து