முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இன்று சந்திக்கிறது காங், குழு

செவ்வாய்க்கிழமை, 2 டிசம்பர் 2025      தமிழகம்
Selvaperundhai 2024-04-19

Source: provided

சென்னை : வரும் சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 பேர் கொண்ட குழு இன்று சந்திக்கிறது.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. அந்தவகையில், ஆளும் கட்சியான தி.மு.க. விரைவில் தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடுக்கான முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளன. பா.ம.க. (டாக்டர் ராமதாஸ்), தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் தி.மு.க. அணியில் இணையலாம் என்ற கருத்தும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அமைத்தது. இந்த குழுவில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஐவர் குழுவினர் இன்று (புதன்கிழமை) அண்ணா அறிவாலயம் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச இருக்கிறார்கள். குழு அமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இந்த சந்திப்பு நிகழ இருக்கிறது. இதில் சட்டசபை தேர்தல், பிரசார வியூகம், கூட்டணி கட்சிகள் ஒருமித்தமாக செயல்படுவது குறித்து பேசப்பட உள்ளது. தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தையும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து, கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினரிடம் தி.மு.க. பேச இருக்கிறது. இந்த நிகழ்வு அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து