முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் சட்டசபை சபாநாயகராக பிரேம்குமார் ஒருமனதாக தேர்வு

செவ்வாய்க்கிழமை, 2 டிசம்பர் 2025      இந்தியா
Permkumar 2025-12-02

Source: provided

பாட்னா : பீகார் சட்ட சபை சபாநாயகராக பா.ஜ.க. மூத்த தலைவர் பிரேம் குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பீகார் சட்டசபைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது. இதில், பா.ஜ.க. 89, ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்​களைக் கைப்​பற்​றின. தேர்தல் வெற்றியை அடுத்து, கடந்த 20 ஆம் தேதி நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றார். அவருடன் 2 துணை முதல்வர்கள், உட்பட 26 அமைச்சர்கள் பதவியேற்றனர். பாஜக​வில் இருந்து 14 பேர், ஐக்​கிய ஜனதா தளத்தில் இருந்து 8 பேர், ராஷ்டிரிய லோக்சக்தி (ராம்வி​லாஸ்) கட்சியில் இருந்து 2 பேர், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவில் இருந்து தலா ஒருவர் அமைச்சராகியுள்ளார்.

இதையடுத்து, பீகார் சட்டசபை கூட்டம் கடந்த நேற்று முன்தினம் முதன்முறையாகக் கூடியது. தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர நாராயண் யாதவ் முன்பாக, தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் முறைப்படி சட்டப்பேரவை உறுப்பினர்களாக பொறுப்பேற்றனர். 

இந்நிலையில், பீகார் சட்ட சபையின் சபாநாயகர் தேர்தல் நேற்று நடைபெற்றது. சபாநாயகர் பதவிக்கு பிரேம் குமார் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளராக உள்ளார் என தற்காலிக சபாநாயகர் அவயில் அறிவித்தார். பின்னர், குரல் வாக்கெடுப்பின் மூலம் பிரேம் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்காலிக சபாநாயகர் நரேந்திர நாராயண் யாதவ் இதை அவையில் அறிவித்தார். கயா டவுன் தொகுதியில் 8-வது முறையாக வெற்றி பெற்ற பிரேம் குமாரை, நிதிஷ் குமாரும், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவும் இணைந்து சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச்சென்று அமர வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து