முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஓ.டி.பி சரிபார்ப்பு இனி கட்டாயம் : விரைவில் அமல்படுத்த ரயில்வே முடிவு

புதன்கிழமை, 3 டிசம்பர் 2025      இந்தியா
Tairn 2023-05-25

Source: provided

புதுடெல்லி : தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஓ.டி.பி சரிபார்ப்பு கட்டாயம் அமல்படுத்த உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தட்கல் டிக்கெட் முன்பதிவுகளுக்காக இந்திய ரயில்வே ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அவர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை கடவுச்சொல் சரிபார்க்கப்பட்ட பின்னரே டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய முடியும்

இந்த ஓ.டி.பி சரிபார்ப்பு முறை  விரைவில் அனைத்து ரயில்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக, ஓ.டி.பி அடிப்படையிலான தட்கல் அங்கீகார அமைப்பு ரயில் எண் 12009/12010, மும்பை சென்ட்ரல்-அகமதாபாத் சதாப்தி எக்ஸ்பிரஸில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற ரயில்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.ஆ.ர்.சி.டி.சி இணையதளம், மொபைல் செயலி மற்றும் ரயில்வே கவுன்ட்டர் உட்பட அனைத்து வகையான தட்கல் முன்பதிவு வழிகளிலும் இந்த புதிய வசதி பொருந்தும்.  இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இந்த மாற்றத்தின் நோக்கம், வெளிப்படையான தட்கல் முன்பதிவுகளை உறுதிசெய்வதும், உண்மையான பயணிகளுக்கு தட்கல் டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான சிறந்த அணுகலை வழங்கும் நோக்கத்துடன் இது கொண்டு வரப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து