எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகளே இண்டிகோ விமான நிறுவனத்தின் குளறுபடிக்கு காரணம் என்று மாநிலங்களவையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு திங்கள்கிழமை விளக்கம் அளித்தார்.
விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் (எஃப்டிடிஎல்) அமலுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக இண்டிகோ நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாநிலங்களவையில் எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேற்று பதில் அளித்து பேசினார். அவர் பேசியதாவது:
“இண்டிகோ நிறுவனத்தின் விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் அட்டவணை மற்றும் உள்திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகளே குளறுபடிக்கு காரணம். கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கூட, விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் தொடர்பாக எவ்வித ஆட்சேபனையும் இண்டிகோ நிறுவனம் தெரிவிக்கவில்லை.
விமானப் போக்குவரத்து துறையில் அதிகமான நிறுவனங்கள் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியாவில் தற்போது 5 பெரிய நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. அதுவும் அமைச்சகம் தரப்பில் மேற்கொண்ட முயற்சியின் விளைவாகும். தாமதங்கள் மற்றும் ரத்துகளால் சிரமப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் உதவ கடுமையான சிவில் விமானப் போக்குவரத்து தேவை விதிகள் உள்ளன. இதனை விமான நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மென்பொருள் பிரச்னை குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து துறையில் தொடர்ச்சியாக தொழில்நுட்ப மேம்பாடு நடந்து வருகிறது. நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை உலகத் தரம் வாய்ந்த உயர்ந்த தரநிலைகளை கொண்டு வருவதே அரசின் தொலைநோக்குப் பார்வை. கடந்த 3 நாள்களில் மட்டும் 5,86,705 இண்டிகோ பயணிகளுக்கு அவர்களின் பயணச்சீட்டுத் தொகையான ரூ. 569 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


