எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாட்டில் மக்கள் துணையுடன் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்றும் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் வாக்குகள் 2.50 கோடியை தாண்டும் என்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வாக்குச்சாவடி வாரியாக...
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என தெரிகிறது. இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். இதற்காக வாக்குச்சாவடி வாரியாக பாக முகவர்கள் தி.மு.க.வில் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரையும் அந்தந்த நகர ஒன்றிய பேரூர் அளவில் ஒருங்கிணைந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதி வாரியாகவும் பாக முகவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஆலோசனை...
இதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினும் மண்டல அளவில் ஆலோசனை கூட்டங்களை நடத்தி முடித்துள்ளனர். இதன் பிறகு என் வாக்குச் சாவடி-வெற்றி வாக்குச்சாவடி பயிற்சி கூட்டத்தை மாமல்ல புரத்தில் கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி நடத்தினார். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று கட்டளையிட்டு இருந்தார். இப்போது என் வாக்குச் சாவடி-வெற்றி வாக்குச் சாவடி செயல்பாடு எப்படி உள்ளது என்பது பற்றி ஆலோசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக மாவட்டக் கழக செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
வேறோடு வீழ்த்துவோம்....
அவரது அறிவுரைகளை கேட்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநகர ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், சட்டமன்ற பாராளுமன்ற, உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர் கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை ஒரே இடத்தில் அமர வைத்து முதல்வரின் பேச்சை கேட்பதற்காக மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி நேற்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் உரையாற்றினார். அவர் பேசும்போது, தமிழ்நாட்டை கபளீகரம் செய்ய திட்டமிடும் கூட்டத்தை வேறோடு வீழ்த்துவோம். மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கு செய்து கொண்டிருக்கும் துரோகங்களை நிதி ஒதுக்கீடுகளில் செய்து கொண்டிருக்கும் வஞ்சகங்களை எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அவரவர் வாக்குச்சாவடியில் வெற்றி பெறுவது இலக்காக இருக்க வேண்டும். ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு டார்கெட் உருவாக்கி செயல்படுங்கள்.
தி.மு.க ஆட்சி அமைக்க...
தேர்தலில் பணியாற்றும் ஒவ்வொருவரும் தி.மு.க ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கை உள்ளத்தில் தாங்கி உழைக்க வேண்டும். நீங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கு நன்றாக தெரியும். ஆனாலும் இன்னும் உங்கள் பணியை வேகப்படுத்துங்கள். அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுங்கள். ஒற்றுமை இல்லாமல் எந்த இலக்கையும் அடைய முடியாது. நம்முடைய வெற்றியை யாரும் தடுக்க முடியாது. என்னுடைய வாக்குச்சாவடியில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று ஒவ்வொரு கழக உடன் பிறப்புகளும் உறுதியேற்று களப்பணியாற்றினால், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முன்னிலை பெற்று, 2026-ல் 7-வது முறையாக தி.மு.கழகம் ஆட்சி அமைவது உறுதியாகி விடும்.
மனமார்ந்த பாராட்டுகள்...
தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் உயரிய நோக்குடன், பசி, உறக்கம், குடும்பம் ஆகியவற்றைத் துறந்து எஸ்.ஐ.ஆர். பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்...வாழ்த்துகள். நாம் இவ்வளவு கடினப்பட்டு இருந்தாலும் பாதி கிணறு தான் கடந்துள்ளோம். வெரிபிகேஷன் பணிகள் நிறைவடைந்து, நமது மக்களின் பெயர்கள் விடுபடாமல் வாக்காளர் பட்டியல் வந்தால் தான் முழு கிணற்றையும் கடந்ததாக கருத முடியும்.
தீவிரமாக பணியாற்ற...
எஸ்.ஐ.ஆர். பணிகள் வாக்குரிமையை பாதுகாக்கும் அடிப்படைப் பணியாக இருந்தால், "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்பது நமது வெற்றியை உறுதிப்படுத்தும் தேர்தல் பணியாகும். எனவே, நாம் அனைவரும் களத்தில் மிகுந்த தீவிரத்துடன் பணியாற்ற வேண்டும். உங்கள் ஆற்றலுக்கும் உழைப்புக்கும் முன் எவராலும் நிற்க முடியாது. எத்தனை எதிரிகள் வந்தாலும், எத்தனை அணிகள் செயல்பட்டாலும், தமிழ்நாட்டை மீண்டும் ஆளப்போவது உதயசூரியன்தான். உங்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இதை கூறவில்லை. இது தான் உண்மை.
எடுத்துச் சொல்ல...
நம் திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மூலம், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 86 லட்சம் மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர். இதில் பயனாளிகளுடன் சேர்த்து, கழகத்தினரையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.முந்தைய ஆட்சிக்காலங்களில் மழை பெய்தாலே உதவிக்காக காத்திருந்த நிலையும், நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவு வழங்கும் முறையும் எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பதை மக்களுக்கு களத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும்.
கூடுதலாக வாக்குகள்...
நமது சிறப்பான பணிகளைப் பார்த்து நடுநிலை வாக்காளர்களும் இன்று நமக்கு ஆதரவாக நிற்கின்றனர். மொத்தமாக, பயனாளிகள்-கழகத்தினர்-நடுநிலை வாக்காளர்கள் என சேர்த்தால், 2.50 கோடி வாக்குகளை தாண்டுவது சாத்தியமே. கடந்த 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் நமது கூட்டணி பெற்ற வாக்குகள் 2 கோடியே 9 லட்சம் வாக்குகள் தான். இந்த முறை, அதைவிட கூடுதலாக அதிக வாக்குகளைப் பெறுவது உறுதி.
எதிராக பயன்படுத்துவர்...
இந்த புள்ளிவிவரங்களை முன்வைத்து, உங்கள் களப்பணியின் மீது உள்ள நம்பிக்கையோடு தெளிவாகக் கூறுகிறேன். நாம்தான் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளோம். இத்தனை சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும், நம் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. சி.பி.ஐ, ஈ.டி, ஐ.டி, தேர்தல் ஆணையம், இவையனைத்தையும் அவர்கள் நமக்கு எதிராக பயன்படுத்துவார்கள். தினந்தோறும் எராளமான பொய்கள் பரப்புவார்கள், போலியான பிம்பங்களை உருவாக்கு வார்கள், ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்ச் செய்திகளை பரப்புவார்கள்.
முக்கியமான வியூகம்...
இவற்றை எதிர்கொள்ள, நமது பலத்தை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். கொள்கை தான் நமது பலம். நிர்வாகிகள் தான் நமது பலம். தீயாக உழைக்கும் கழக உடன்பிறப்புகள் தான் நமது பலம். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உள்ள கழக கட்டமைப்பு தான் நமது பலம். இந்த பலங்களை மிகத் துல்லியமாகப் பயன்படுத்துவதே நமது முக்கியமான வியூகம் ஆக இருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நமது வாக்குகளை உறுதி செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நமது கழகத்தினர் உற்சாகத்துடன் செயல்பட வைக்க வேண்டும்.
நேரடியாகப் பங்கேற்பேன்...
அதற்காகத்தான், "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற இந்தப் பரப்புரை. அந்தந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட மாநில நிர்வாகி முதல், வார்டு மற்றும் கிளைச் செயலாளர்கள் வரை அனைவரையும் இந்தக் கூட்டங்களில் பங்கேற்க அழைக்க வேண்டும். அந்த வாக்குச்சாவடியில் மூத்த கழக முன்னோடிகள் அல்லது ஏதேனும் அதிருப்தியாளர்கள் இருந்தால், அவர்களையும் தவறவிடாமல் அழைக்க வேண்டும். தேனாம்பேட்டையில், என் வாக்குச்சாவடியில் பகுதிச்செயலாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நானும் நேரடியாகப் பங்கேற்பேன். வீடு வீடாகச் செல்லும் பூத் கமிட்டி குழுக்களில் மகளிர் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
எதிர்பார்க்கிறேன்....
ஒவ்வொரு பூத் கமிட்டி உறுப்பினரும் வீடு வீடாகச் செல்லுவதை உறுதி செய்யுங்கள். வீடுவீடாக சென்று விடுபட்ட வாக்காளர்களின் விவரங்களை முறையாக சரிபார்க்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும், திராவிட மாடல் அரசின் சாதனைகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கப்பட வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். நான் இரவிலும் உறங்காமல் உழைத்து வருகிறேன் என்பது உங்களுக்கே தெரியும். அதே அளவிலான உழைப்பை, உங்களின் ஒவ்வொருவரிடமிருந்தும் நான் எதிர்பார்க்கிறேன். ஒரு வாக்குச்சாவடியை வென்றால், ஒரு தொகுதியை வெல்லலாம். எனவே, இந்தத் தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியும் மிக முக்கியமானது. உங்கள் வாக்குச்சாவடியில் வெற்றி பெற வேண்டிய பொறுப்பை உங்களிடமே ஒப்படைக்கிறேன். ஒவ்வொருவரும் தங்களது வாக்குச்சாவடிகளில் வென்று வருவீர்கள் என்ற முழு நம்பிக்கையுடன் இந்தப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துள்ளேன். என் நம்பிக்கையை காப்பாற்றுங்கள். மீண்டும் வெல்வோம், வரலாறு படைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ரஷ்ய அதிபர் புதினை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வருகை
08 Dec 2025புதுடெல்லி, ஜனவரி மாதம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-12-2025
08 Dec 2025 -
பல்கலை., பட்டமளிப்பு விழா: கவர்னரை அவமதிப்பது ஏற்புடையதல்ல: ஐகோர்ட்
08 Dec 2025மதுரை, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,பட்டமளிப்பு விழாவில் கவர்னரை அவமதிப்பது ஏற்புடையதல்ல என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் டிச.14 வரை மழைக்கு வாய்ப்பு
08 Dec 2025சென்னை, தமிழகத்தில் டிசம்பர் 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. ஊழல்: கம்பி எண்ணப்போவது உறுதி - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு
08 Dec 2025சென்னை, தி.மு.க. ஊழல் கூறித்து கம்பி எண்ணப்போவது உறுதி என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் வாக்குகள் 2.50 கோடியை தாண்டும்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
08 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மக்கள் துணையுடன் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்றும் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் வாக்குகள் 2.50 கோடியை தாண்டும் என்றும் மாவட்ட செயலாள
-
முதல்வர் சார்தான் உதவி பன்னணும்: கேரம் சாம்பியன் கீர்த்தனாவின் தாயார் கோரிக்கை
08 Dec 2025சென்னை, உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் கீர்த்தனா 3 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார்.
-
வனவிலங்கு இடமாற்றம்: வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க நிபுணர் குழு அமைத்த அரசு
08 Dec 2025சென்னை, யானைகளை இடமாற்றம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசு சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
இந்து விரோத அரசியலுக்கு விரைவில் முடிவு கட்டப்படும்: வானதி சீனிவாசன்
08 Dec 2025சென்னை, தி.மு.க.வின் அரசியலுக்கு முடிவு கட்டப்படும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.
-
நடிகை பாலியல் வழக்கு: பிரபல மலையாள பட நடிகர் திலீப் விடுவிப்பு: எர்ணாகுளம் கோர்ட் உத்தரவு
08 Dec 2025எர்ணாகுளம், நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை என்று எர்ணாகுளம் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
-
இண்டிகோ குளறுபடிகள் குறித்து பார்லி. மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்
08 Dec 2025புதுடெல்லி, திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகளே இண்டிகோ விமான நிறுவனத்தின் குளறுபடிக்கு காரணம் என்று மாநிலங்களவையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாய
-
சட்டவிரோதமாக மண் அள்ளியதாக செங்கல் சூளைகளுக்கு ரூ.900 கோடி அபராதம்
08 Dec 2025கோவை, சட்டவிரோதமாக மண் அள்ளியதாக செங்கல் சூளைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
-
வரும் 11-ம் தேதி தே.ஜ. கூட்டணி எம்.பி.க்களுக்கு விருந்தளிக்கிறார் பிரதமர் மோடி
08 Dec 2025புதுடெல்லி, ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பாராளுமன்ற அவை வியூகத்தை நெறிப்படுத்தவும் வரும் 11-ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப
-
இண்டிகோ ஏர்லைன்ஸ் சந்தை மதிப்பு வீழ்ச்சி
08 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ ஏர்லைன்ஸ் சந்தை மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. விமான சேவைகள் இன்னும் சீராகாததால் அதன் பங்கு விலை 9 சதவீதம் வரை சரிந்துள்ளது.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
08 Dec 2025சென்னை, வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனையானது.
-
வந்தே மாதரத்தின் பெருமையை பறைசாற்றும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது: பிரதமர் மோடி
08 Dec 2025புதுடெல்லி, வருங்கால சந்ததிகளுக்கு வந்தே மாதரம் வழிகாட்டியாக இருக்கும்.
-
23 சட்டமன்ற தொகுதிகளில் முதல்வர் சிறு விளையாட்டு அரங்கம்: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
08 Dec 2025சென்னை, 69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 23 சட்டமன்ற தொகுதிகளில் முதல்வர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
98.92 கோடி ரூபாய் செலவில் புதிய மீன் விதை பண்ணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 Dec 2025சென்னை, புதிய மீன் விதைபண்ணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்து தவித்த குழந்தைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவி
08 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்துவாடும் நான்கு குழந்தைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: டிராவிட்டின் சாதனையை சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித்
08 Dec 2025பிரிஸ்பேன், டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் டிராவிட்டின் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் சமன் செய்துள்ளார்.
-
கரூர் நெரிசல் சம்பவம் குறித்து த.வெ.க. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளரிடம் சி.பி.ஐ. விசாரணை
08 Dec 2025கரூர், கரூர் சம்பவத்தை தொடர்ந்து சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
மீண்டும் போர் பதற்றம்: கம்போடியா மீது தாய்லாந்து திடீர் தாக்குதல்: ஒருவர் பலி
08 Dec 2025பாங்காக், கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அங்கு மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டது.
-
கிரீமிலேயருக்கு ஆதரவாக பேசியதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டது: சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி வேதனை
08 Dec 2025மும்பை, கிரீமிலேயருக்கு ஆதரவாக பேசியதாக என் மீது குற்றம் சாட்டினர் என்று முன்னாள் தலைமை நீதிபதி பிஆர் கவாய் வேதனை தெரிவித்துள்ளார்.
-
பாலியல் வழக்கு திரைத்துறை வளர்ச்சியை அழித்துவிட்டது: விடுதலைக்கு பிறகு நடிகர் திலீப் பேட்டி
08 Dec 2025திருவனந்தபுரம், என் மீதான பாலியல் வழக்கு என் திரைத்துறை வளர்ச்சியை அழித்துவிட்டது என நடிகர் திலீப் வேதனை தெரிவித்துள்ளார்.
-
அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி: கோபத்தில் வெளியேறிய தி.மு.க. எம்.எல்.ஏ.வால் திடீர் பரபரப்பு
08 Dec 2025பழனி, பழனி நடைபெற்ற தி.மு.க. அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியை எம்.எல்.ஏ. புறக்கணித்தார்.


