Idhayam Matrimony

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு - 9 பேர் காயம்

ஞாயிற்றுக்கிழமை, 14 டிசம்பர் 2025      உலகம்
Gun 2023-10-05

ரோட் ஐஸ்லாந்து, அமெரிக்காவின் ரோட் ஐஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தின் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

இது தொடர்பாக பிரவுன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், 2 உயிரிழப்புகளை உறுதி செய்ததுடன், மேலும் 9 பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள் இயல்பு நிலை திரும்பும்வரை வெளியில் வர வேண்டாம் என்றும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இறந்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணைகள் தொடர்வதாகவும், எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை என்றும் மேயர் பிரட் ஸ்மைலி தெரிவித்தார். சந்தேக நபரை கண்டறிய பிரவுன் பல்கலைக்கழக அதிகாரிகள், பிராவிடன்ஸ் நகர காவல்துறை மற்றும் எஃப்.பி.ஐ ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவதாக அவர் கூறினார். இந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் 70-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து