Idhayam Matrimony

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகான தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம்

புதன்கிழமை, 17 டிசம்பர் 2025      தமிழகம்
School-Education 2022 02 11

சென்னை, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை கண்டிப்பாக அதிகரித்து காட்ட வேண்டும் என்ற முனைப்பில் பள்ளிக்கல்வித் துறை களம் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் பல மாவட்டங்கள் தேர்ச்சி சதவீத பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்தன. தலைநகராம் சென்னை தேர்ச்சி சதவீதத்தில் மிகவும் பின்தங்கி இருந்தது.

எனவே பின்தங்கிய மாணவ-மாணவிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி பெறும் அளவுக்கு அவர்களை தயார்படுத்தி வருகின்றனர். காலாண்டு தேர்வு முடிவு அடிப்படையில் இவ்வகையான மாணவ-மாணவிகள் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் மீது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்துகின்றனர். 

இதேபோல் பள்ளி அளவில் தேர்ச்சியில் பின்தங்கிய பள்ளிகளையும் பட்டியலிட்டு, அதனை கண்காணிக்கவும் சிறப்பு அதிகாரிகளை சில மாவட்டங்களில் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களும் இந்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை அடுத்த ஆண்டு மே மாதத்தில் வெளியாகும் பொதுத்தேர்வு முடிவில் பிரதிபலிக்குமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து