எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொச்சி, நடுவானில் திடீர் பழுது காரணமாக ஏர் இந்தியா விமானம் கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 160 பயணிகள் பயணித்தனர். இந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானத்தின் லேண்டிங் கியர் மற்றும் டயரில் பழுது ஏற்பட்டது. இதனைக் கண்டறிந்த விமானி, உடனடியாக அவசரமாக தரையிறக்க விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டார்.
உரிய அனுமதி கிடைத்ததும் விமானம், கொச்சி ஏர்போர்ட்டில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து கோளாறை சீர் செய்யும் பணிகள் நடைபெற்றது.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள், “ பழுது காரணமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறக்குவது குறித்த தகவல் கிடைத்தவுடன் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. காலை 9.07 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தை ஆய்வு செய்ததில், விமானத்தின் வலது பக்கம் உள்ள இரு டயர்களும் வெடித்துள்ளன” என்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


