எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க், பூமியின் சுழற்சி, காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எரிபொருள் இன்றி மின்சாரம் தயாரிக்கும் சிறிய கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் நாசாவின் ஜேபிஎல் ஆய்வக விஞ்ஞானிகள் இணைந்து, பூமியின் சுழற்சி மற்றும் காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எரிபொருள் இன்றி மின்சாரம் தயாரிக்கும் சிறிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ளனர். பூமியின் காந்தப்புலத்தில் உள்ள ஒரு நுணுக்கமான இடைவெளியைப் பயன்படுத்தி, 17 மைக்ரோவோல்ட் மின்சாரத்தை வெற்றிகரமாக உற்பத்தி செய்து சாதித்துள்ளனர்.
மாங்கனீசு - துத்தநாக பெரைட் உருளையைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட இந்தச் சோதனையில், பூமி சுழலும்போது ஏற்படும் காந்த விசை மின்சாரமாக மாற்றப்பட்டுள்ளதோடு, இதனைப் பெரிய அளவில் மேம்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி அல்லது காற்று இன்றி, பூமியின் தடையற்ற சுழற்சியிலிருந்து மட்டும் மின்சாரம் எடுக்கும் இந்தக் கருவி, ஒருமுறை நிறுவப்பட்டால் தேய்மானம் அடையாமல் தொடர்ந்து இயங்கும் 'பேட்டரி' போலச் செயல்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகம் முழுவதற்கும் தேவையான மின்சாரத்தை எடுத்தாலும், அடுத்த 100 ஆண்டுகளில் பூமியின் சுழற்சி வேகம் ஒரு மில்லி செகண்டிற்கும் குறைவாகவே குறையும் என்பதால் இது பாதுகாப்பானது என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


