Idhayam Matrimony

பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார்: செந்தில்பாலாஜி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2025      தமிழகம்
Senthil-Balaji-2024-11-21

கோவை, பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பழைய அரசியல் கட்சிகள் புதிய அரசியல் கட்சிகள் என எதுவாக இருந்தாலும் தி.மு.க.வை விமர்சனம் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாத ஒரு சூழல் தமிழகத்தில் இருக்கிறது. தி.மு.க.வை விமர்சனம் செய்தால்தான் அவர்கள் அரசியல் களத்தில் இருக்க முடியும் என்ற சூழல் உள்ளது. அ.தி.மு.க.வை கேட்டால் எங்களுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என்பார்கள்.

புதிதாக வந்தவர்களை கேட்டால் எங்களுக்கும் தி.மு.க.வுக்கும் தான் போட்டி என்று சொல்வார்கள். உண்மையான மக்கள் ஆதரவை பெற்ற ஒரு இயக்கமாக தி.மு.க. இருக்கிறது. நாங்கள் யாரையும் போட்டியாளராக பார்க்கவில்லை. மக்கள் இயக்கமாக இருக்கிறோம். யாரையும் குறைவாக நாங்கள் சொல்லவில்லை. பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் நான் போட்டியிடப் போவதாக சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. கோவை தொகுதி நல்ல தொகுதி. நல்ல மக்கள். என் மீது பாசத்தை வைக்கிறார்கள். சமூக வலைதளங்களில் யாரோ ஒருவர் பேசுவதை நாம் பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தமிழக வளர்ச்சியில் பா.ஜனதாவுக்கு அக்கறை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து