முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தா தலைமையில் புதிய அரசு: புதுப்பொலிவு பெறுகிறது மே.வ. தலைமை செயலகம்

திங்கட்கிழமை, 16 மே 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா,மே.- 16 - மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் அமையவுள்ள புதிய அரசுக்காக புது பொலிவுடன் தயாராகி வருகிறது அந்த மாநில தலைமை செயலகம்.  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ரைட்டர்ஸ் கட்டிடம்தான் அந்த மாநில தலைமை செயலகமாக இருந்து வருகிறது. இங்குதான் முதல்வர், அமைச்சர்களுக்கான அலுவலகங்களும் அமைந்துள்ளது. கடந்த 34 ஆண்டுகளாக இந்த கட்டிடத்தில் இருந்தே இடதுசாரி கட்சியினர் ஆட்சி நடத்தி வந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியும் இங்கிருந்தே மாநிலத்தை ஆளுவதற்கு திட்டமிட்டுள்ளார்.
புதிய அரசு பதவியேற்பதையொட்டி இந்த கட்டிடம் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. இரவு, பகலாக நடந்து வரும் இந்த பணிகளை அந்த மாநில பொதுப் பணித்துறை செய்து வருகிறது. புதிய அரசு பொறுப்பேற்கும் வரை இடதுசாரி அரசு நீடிக்கும். இதனால் முதல்வர் அறை முன்பு புத்ததேவ் பெயர் பலகை தொங்கிக் கொண்டிருக்கிறது. முதல்வர் அறைக்குள் அமைந்துள்ள நாற்காலியை படம் பிடிக்க வேண்டும் என்பதில் பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் ஆர்வமாக உள்ளனர். இருந்த போதிலும் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago