எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தொகுதி பங்கீடு குறித்து பியூஷ் கோயலிடம் பட்டியல் கொடுத்த எடப்பாடி பழனிசாமி பொங்கல் முடிந்ததும் தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சூழலில், கட்சிகள் அதற்கு தயாராகும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் நேற்று சென்னை வந்தார். அவர் தியாகராயகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் அக்கட்சி நிர்வாகிகளுடன் சட்டசபை தேர்தல் பணி, கள நிலவரம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், சென்னை லீலா பேலசில் பியூஷ் கோயலை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் சந்தித்து பேசினார். அவர்கள் இருவரும் ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது பா.ஜ.க. சார்பில், தமிழக பா.ஜ.க. இணை பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய இணை மந்திரி எல். முருகன் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர்.
இதுபற்றி எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறும்போது, 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து எப்படி செயல்படுவது? என்பது குறித்து ஆலோசித்தோம் என்றார். இந்த சந்திப்பின்போது, தொகுதி பங்கீடு தொடர்பாக பியூஷ் கோயலிடம் எடப்பாடி பழனிசாமி பட்டியல் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பட்டியலில், அ.தி.மு.க. 170, பா.ஜ.க. 23, பா.ம.க. 23, மற்றவை 18 (தே.மு.தி.க.-6, அ.ம.மு.க.-6, த.மா.கா.-3, ஓ.பி.எஸ்.-3) தொகுதிகளில் போட்டியிடும் என்பதற்கான விவரங்கள் உள்ளன என கூறப்படுகிறது.
கூட்டணி தொடர்ப்க பா.ம.க., தே.மு.தி.க.விடம் நாங்களே பேச்சுவார்த்தை நடத்தி கொள்கிறோம் என அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஓ. பன்னீர் செல்வம் மற்றும் தினகரன் ஆகியோருடன் பா.ஜ.க.வே பேச்சுவார்த்தை நடத்தி கொள்ளட்டும் என கூறியுள்ளனர். பொங்கல் பண்டிகை முடிந்ததும் தொகுதி பங்கீடு விவரங்கள் வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


