Idhayam Matrimony

இன்று அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி பயணம்

புதன்கிழமை, 24 டிசம்பர் 2025      தமிழகம்
Stalin 2024-12-04

கள்ளக்குறிச்சி, வீரசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெறும் அரசு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இன்று (டிச. 25) செல்கிறார்.முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி கள்ளக்குறிச்சியில் இன்று (டிச. 25), நாளை (டிச. 26) ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு சென்று, அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். வீரசோழபுரத்தில் பொதுப்பணித் துறையின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்ட புதிய ஆட்சியரகக் கட்டடத்தை திறந்துவைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து வீரசோழபுரத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள உள்ளார்.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவுற்றத் திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதியத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி கள்ளக்குறிச்சியில் இன்று (டிச. 25), நாளை (டிச. 26) ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து