எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி, ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணி யில் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;-
தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி விஜய் சொல்லி வருகிறார். இந்தியாவையே பிடித்துவிடுவேனு கூட விஜய் சொல்லலாம்.. ஆனால், இது சினிமா அல்ல. தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும், வேட்பாளர்கள் அறிவிக்க வேண்டும், வேட்பாளர்கள் விலைபோகாமல் இருக்க வேண்டும். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் இருந்து 10 வேட்பாளர்களின் பெயர்களை விஜய்யால் சொல்ல முடியுமா? கட்சிக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் இருக்க வேண்டும். த.வெ.க.வில் கட்டமைப்பே கிடையாது. குறையாக சொல்லவில்லை.
ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணியில் தற்போதைக்கு இல்லை. அதி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக வெளிவரும் தகவலில் உண்மை இல்லை. 2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு மாற்று அரசாக தேசிய ஜனயாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். இந்த கருத்துள்ள எல்லோரும் ஒன்றாக இணைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


