முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி: நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்க படை திடீர் தாக்குதல்

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2025      உலகம்

அபுஜா, நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்க ராணுவம் பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்களை நிகழ்த்தி வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அந்நாட்டு அரசாங்கம் இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. நைஜீரியாவில் நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களில் இஸ்லாமியர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக நைஜீரியா அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நைஜீயாவில் கிறிஸ்தவர்கள் மீது நடக்கும் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். சர்வதேச மத சுதந்திர சட்டத்தின் கீழ், அமெரிக்கா சமீபத்தில் நைஜீரியாவை 'குறிப்பிட்ட கவனத்திற்குரிய நாடு' என்று அறிவித்தது. மேலும், நைஜீரியாவில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள பென்டகனுக்கு உத்தரவிட்டதாக ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில், நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தியதாக டொன்லாடு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வடமேற்கு நைஜீரியாவில் அப்பாவி கிறிஸ்தவர்களை குறிவைத்து கொடூரமாக கொலை செய்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் எனது உத்தரவின்பேரில் சக்திவாய்ந்த, கொடிய தாக்குதலை நடத்தியுள்ளது.

கிறிஸ்தவர்களை கொலை செய்வதை நிறுத்தாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஏற்கனவே பயங்கரவாதிகளுக்கு நான் எச்சரிக்கை விடுத்திருந்தேன். இந்த நிலையில், அமெரிக்க ராணுவம் தனது அபாரமான திறமையால் பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

எனது தலைமையின் கீழ் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது. அமெரிக்க ராணுவத்தை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். உயிரிழந்த பயங்கரவாதிகள் உள்பட, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால், பயங்கரவாதிகளின் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்று பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து