Idhayam Matrimony

உக்ரைன் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்: 8 பேர் படுகாயம்

சனிக்கிழமை, 27 டிசம்பர் 2025      உலகம்
Ukraine-war-2025-0

கீவ், உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் சுமார் 1,400 நாட்களைக் கடந்து நீடித்து வருகிறது. இந்த போரால் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் உக்ரைனை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் முன்மொழிந்த 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை, நீண்ட இழுபறிக்குப்பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டுள்ளார். இதனால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை விரைவில் சந்திப்பேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “நாங்கள் ஒருநாளும் தோல்வியடையமாட்டோம். உயர்மட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக டொனால்டு டிரம்ப்பை விரைவில் சந்திக்க உள்ளேன். புத்தாண்டுக்கு முன் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன” என்று தெரிவித்திருந்தார்.

டிரம்ப், ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் நேற்று அதிகாலை ரஷ்ய ராணுவம் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 16 வயது சிறுமி உள்பட மொத்தம் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து