Idhayam Matrimony

கர்நாடகா: மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி மீட்பு

ஞாயிற்றுக்கிழமை, 28 டிசம்பர் 2025      இந்தியா
Karnataka-2025-12-28

பெங்களூரு, கர்நாடகாவில் மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி உயிருடன் மீட்கப்பட்டார்.

கர்நாடகாவின் விஜய்நகர மாவட்டத்தில் ஹம்பி நகரில் அஷ்டபூஜா சனா என்ற மலை உள்ளது. இந்த மலை மீது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புரோனோ ரோஷர் (வயது 52) என்ற சுற்றுலா பயணி கடந்த புதன்கிழமை தனியே ஏறியுள்ளார்.

அப்போது, மலையேற்றத்தின்போது புரோனோ தவறி கீழே விழுந்துள்ளார். இதனால், காலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் கடந்த 2 நாட்களாக உதவிகேட்டு கூட்டலிட்ட நிலையில் அந்த மலையில் யாரும் இல்லாததால் உதவிகிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காலில் பலத்த காயமடைந்த மெல்ல மெல்ல நகர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள வாழைதோட்டத்திற்குள் நுழைந்துள்ளார். வாழைத்தோட்டத்திற்குள் வேலை செய்துகொண்டிருந்த சிலர் புரோனோவை கண்டுபிடித்தனர். இதையடுத்து, புரோனோவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து