Idhayam Matrimony

சேலத்தில் ராமதாஸ் தரப்பில் இன்று பொதுக்குழுக் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 28 டிசம்பர் 2025      தமிழகம்      அரசியல்
Ramadoss 2023-07-28

சென்னை, சேலத்தில் இன்று ராமதாஸ் தரப்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: எனக்கு வயதாகிவிட்டது, புத்தி பேதலித்து விட்டது, சுயநினைவு இல்லாமல் பேசுகிறார் என்றெல்லாம் அன்புமணி கும்பலைச் சேர்ந்த சிலர் அசிங்கப்படுத்துகிறார்கள். அதை தாங்கும் சக்தி எனக்குள்ளது. ஆனால், என் உழைப்பில் உருவான கட்சியை தயவு செய்து காயப்படுத்தாதீர்கள்.

அன்புமணிக்கு எம்.பி., மத்திய அமைச்சர், தேர்தலில் தோற்ற பிறகும் ராஜ்யசபா எம்.பி. என எல்லாமே கொடுத்தோம். ஆனால், அவர் தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை. மக்களுக்கு உழைக்கவில்லை. ஒரு காலத்தில் பா.ம.க.வுக்கு 20 எம்எல்ஏ-க்கள் இருந்தனர். தற்போது கட்சி அங்கீகாரத்தை இழந்து நிற்கிறது. என்னை ஏமாற்றியவர்களை மன்னிப்பேன். ஆனால், என்னை நம்பி வந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் ஏமாற விடமாட்டேன். நான் உருவாக்கிய பா.ம.க.வைப் பாதுகாக்கவே இன்று சேலத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது. அது சாதாரண கூட்டம் அல்ல. பா.ம.க.வின் மறுபிறப்பு.

வரும் தேர்தலில் 25 தொகுதி களில் வெற்றி பெற்று, நமது கட்சியின் சின்னம், இழந்த அங்கீகாரத்தை மீட்க வேண்டும். அன்புமணியுடன் இருந்து ஏமாறாதீர்கள். பெற்ற தந்தைக்கே துரோகம் செய்பவர், இந்த இயக்கத்தையோ, மக்களையோ காப்பாற்றுவாரா? நான் நம்பிய சிலர் என்னை ஏமாற்றினாலும், என் மக்கள் என்னுடன் நிற்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து