எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது. ஒரு கிராம் ரூ.13,020-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலை நேற்று கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 281 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
எல்லோரும் சேமிக்க நினைக்கும் தங்கம், ஏழைகளுக்கு ஏக்கம் தரும் ஒன்றாக மாறிப்போய்விட்டது. இந்த 2025ல், அந்த அளவுக்கு எட்டிப்பிடிக்க முடியாத விலை உயர்வை சந்தித்துள்ளது தங்கம். அதுமட்டுமல்ல தங்கத்துக்கு போட்டியாக வெள்ளியும் விலையேற்றத்தில் விண்ணை முட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது. அதேபோல, அந்த விலையையும் தொட்டது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.
கடந்த வார தொடக்கத்தில் ஒரு சவரன் ஒரு லட்சத்து 560-க்கு தொடங்கி வார இறுதியில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது. கடந்த வாரம் முழுக்க தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையானது. அந்த வகையில் நேற்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்து விற்பனையானது. நேற்று கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,020-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனையானது. தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலையும் நேற்று குறைந்து விற்பனையானது. அந்த வகையில், நேற்று கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 281 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
கடைசி 5 நாட்கள் தங்கம் விலை:
1) 29-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,160.
2) 28-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800.
3) 276-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800.
4) 26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,120.
5) 25-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,560.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


