Idhayam Matrimony

உன்னாவ் வழக்கில் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. செங்கருக்கான தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

திங்கட்கிழமை, 29 டிசம்பர் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, செங்கரை ஜாமீனில் விடுவிக்க டெல்லி ஐகோர்ட் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. செங்கரின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதுக்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு, உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஒருவரை (அப்போது அவருக்கு 17 வயது)  கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பா.ஜ.க. எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. டிசம்பா் 2019-இல் விசாரணை நீதிமன்றத்தால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான செங்கார் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட் கடந்த செவ்வாய்க்கிழமை, தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர் தரப்பிலும், சி.பி.ஐ. தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் பிறப்பித்த உத்தரவில், ‘குற்றவாளி ஒரு தனி குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டிருக்கும் இந்த அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 23 தேதியிட்ட டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு நாங்கள் தடை விதிக்கிறோம். எனவே, அந்த உத்தரவின்படி செங்கார் விடுவிக்கப்பட மாட்டார்’ என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து