Idhayam Matrimony

இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 16 பேர் உடல் கருகி பலி - பலர் காயம்

திங்கட்கிழமை, 29 டிசம்பர் 2025      உலகம்
Indonesia-2025-12-29

மணிலா, இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா நாட்டில், வடக்கு சுலவேசி மாகாணத்தின் மனாடோவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது தீவிபத்து ஏற்பட்டதாக திங்கள்கிழமை போலீஸார் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து அருகில் வசிப்பவர்கள் அவசர சேவைகளுக்குத் தகவல் அளித்தனர். ஆறு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 16 முதியோர்கள் பலியாகினர். மேலும் காயமடைந்த 15 பேர் இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்கள் உடல்கள் குடும்பங்களின் உதவியுடன் அடையாளம் காண மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்தின்போது பலரை மீட்க அக்கம்பக்கத்தினர் உதவியதாகக் கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து